நாம் தமிழர் கட்சி – பொதுக்குழுக் கூட்டம் | திருச்சி | 12.03.2016

7

அறிவிப்பு
———————
அன்புடையீர்! வணக்கம்,
அரை நூற்றாண்டு காலமாக இந்நாட்டை பாழ்படுத்திய திராவிட அரசியல் கட்சிகளை வீழ்த்துகின்ற களம், வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலாகும். அதற்கான களப்பணியை வகுத்துக்கொள்ளவும், வெற்றிக்கு வழிவகுத்துக்கொள்ளவும் நாம் கலந்து பேசுவோம் வாருங்கள்.
வருகின்ற 12.03.2016 சனிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு பி.எஸ்.எஸ் திருமண மண்டபம், பீம நகர், (நீதிமன்றம் அருகில்) திருச்சி-1 என்ற முகவரியில் நமது கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் வேட்பாளர்கள், மாநில, மண்டல, மாவட்ட, மாநகர, நகர, பேரூராட்சி, ஒன்றிய, பகுதி, மகளிர், இளைஞர், மாணவர் மற்றும் வீரத்தமிழர் முன்னணி ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புரட்சி வாழ்த்துகளுடன்,

செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைபாளர்
நாம் தமிழர் கட்சி.

நாள்: 12.03.2016

நேரம்: காலை 9 மணி

இடம்: பி.எஸ்.எஸ் திருமண மண்டபம், பீம நகர், (நீதிமன்றம் அருகில்) திருச்சி-1