தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் மற்றும் மாவீரர் தின பொதுக்கூட்டங்கள்

137

வருடா வருடம் நாம் தமிழர் கட்சி பெரும் எழுச்சியுடன் கொண்டாடுவது மாசற்ற நம் தலைவர் தேசியத்தலைவர் பிறந்தநாள் மட்டுமே. இந்தவருடமும் இவ்இனத்திற்காக அனைத்தையும் தந்த தமிழ்தேசிய தலைவருக்கு நம் குருதியை தானமாக கொடுத்து அவர் வழி பயணிக்க உறுதி ஏற்போம்.. சென்ற வருடத்தை விட இம்முறை அதிகமாக குருதிக்கோடை வழங்கி தலைவர் மேல் நாம் கொண்ட அன்பை பற்றை வெளிப்படுத்துவோம்..

நம் மண்காக்க நம் மக்கள் காக்க போராடி மாண்ட மாவீரர்களை நினைவில் ஏந்தி அவர்கள் கனவை நினைவாக்க உறுதி ஏற்கும் மாவீரர் தின எழுச்சி நாள் பொதுக்கூட்டம் இம்முறை கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு கூட்டுரோடில் மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் நாம் ஒன்றுகூடி தமிழீழ கனவை நினைவாக்க பாடுபடுவோம் என்று சூளுரைப்போம் வாரீர்…

# தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி 20 ஆம் தேதி முதல் 27 தேதி வரை எழுச்சி வாரமாக கடைப்பிடித்து தொடர்ச்சியாக கூட்டங்கள் நிகழ்வுகளை தமிழகமெங்கும் நடத்துகிறது. தமிழ்ச்சொந்தங்கள் அனைவரும் அந்நிகழ்வுகளில் பங்குபெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்…thalaivar-kuruthikodai-2015

thalaivar-kuruthikodai-2015-2

முந்தைய செய்திஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நல்லதம்பி அவர்களின் தாயார் இறுதிஊர்வலத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்றார்
அடுத்த செய்திமழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பணியில் காஞ்சி நாம் தமிழர்