நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை தீர்மானங்கள், முடிவுகள்.

120

நாம் தமிழர்  கட்சி –இளைஞர் பாசறை

           நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் 13-10-2013 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைப்பெற்றது.  இக்கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமை வகித்தார். கூட்டத்தில் இளைஞர் பாசறையின் மாநில பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும், தீர்மானங்களும் பின் வருமாறு :

 

கூட்டத்தில் மேற்கொள்ளபட்ட முடிவுகள்

1.    நாம் தமிழர் கட்சி –இளைஞர் பாசறையின் மாநிலம் தழுவிய அரசியல் மற்றும் தலைமைத்துவ மேம்பாடு பயிலரங்கு வருகிற நவம்பர் 30-டிசம்பர் 1 ஆம் தேதிகளில் பழநியில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

2.     எதிர் வரும் சனவரி 29 மாவீரன் முத்துக்குமார் நினைவுப் பொதுக்கூட்டத்தை கோவை ,திருப்பூர் மாவட்டங்கள் சார்பாக திருப்பூரில் நடத்த கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரிடம் அனுமதி கோருவது என முடிவெடுக்கப்பட்டது.

3.    கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரின் இளைஞர் பாசறையினர் பிற மொழிச் சொல் கலவாது தமிழில் பேசுவது, எழுதுவது போன்றவற்றை தனது கட்டாய வாழ்வியல் நெறிகளாக கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

4.    இளைஞர் பாசறை தளபதிகள், பொறுப்பாளர்கள், பாசறையினர் என அனைவரும் அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி ஆகியவற்றை அதன் பொருள்படும்படி முறையாக, ஒழுங்கமைவுடன் உச்சரிக்க உரிய பயிற்சி எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.

5.    மாநில, மண்டல, மாவட்ட வாரிய இளைஞர் பாசறை பயிற்சி பயிலரங்கள்  கூட்டங்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

6.     மேலும் இளைஞர் பாசறையை வலுவாக்க, சிறப்பாக கட்டமைக்க  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இளைஞர் பாசறையின் மாநிலச் செயலாளர்கள் கீழ் கண்டவாறு அமைந்த பகுதிகளில் தங்களது சிறப்புக் கவனத்தை செலுத்தி இளைஞர் பாசறையை கட்டமைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

 

வழக்கறிஞர்.மணி செந்தில்

பொறியாளர்.துருவன் செல்வமணி

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர்

 

பேரா.கல்யாணசுந்தரம்

நீலகிரி , கோவை, திருப்பூர்

வழக்கறிஞர். அறிவுச்செல்வன்

இராமநாதபுரம், சிங்கங்கை

இயக்குனர் பாலமுரளி வர்மன்

கலை இயக்குனர் சிவராசன்

சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர்,கடலூர், விழுப்புரம் ,வேலூர்

 இயக்குனர் செகதீசன்

சேலம் ,தர்மபுரி, கிருஷ்ணகிரி

 வழக்கறிஞர் கரிகாலன்

நெல்லை, கன்னியாக்குமரி,தூத்துக்குடி,விருதுநகர்

 இளமாறன்

திண்டுக்கல் ,மதுரை, தேனீ

பகதூர்சா

புதுக்கோட்டை

 

நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை 13-10-2013 அன்று நடத்திய மாநில கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.    இலங்கையில் நடைபெறவிருக்கிற பொதுநல நாடுகளின் மாநாட்டை எதிர்த்து தோழர்.தியாகு அவர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நாம் தமிழர் இளைஞர் பாசறை முழுமையாக ஆதரிக்கிறது. போராட்டத்தை பல்வேறு தளங்களில் எடுத்துச் செல்ல இளைஞர் பாசறை உறுதி பூண்டுள்ளது.

2.    தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை ஆகியவைகளை நாம் தமிழர் இளைஞர் பாசறை உறுதியாக எதிர்த்துப் போராடவும், தொடர் போராட்டங்களை நடத்தவும் உறுதியேற்கிறது. தாதுமணல் கொள்ளையினை தடைசெய்த தமிழக அரசின் நடவடிக்கையினை நாம் தமிழர் இளைஞர் பாசறை வரவேற்கிறது. அதே சமயத்தில் இந்நடவடிக்கை மிகவும் தாமதமான ஒன்று என்று கருதுவதோடு மட்டுமில்லாமல்  மேற்படி தடையினை நிரந்தரமாக்கி மண்ணின் வளம் மக்களுக்கானது என்ற அடிப்படையில் தற்சார்பு பொருளாதார கொள்கையினை பின்பற்றவும்  மத்திய, மாநில அரசுகளை நாம் தமிழர் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.

3.    தமிழகத்தில் நடைபெற்று வரும் கல்விக்கொள்ளை, மருத்துவக்கொள்ளை ஆகியவற்றை நாம் தமிழர் இளைஞர் பாசறை உறுதியாக எதிர்த்து போராட உறுதியேற்கிறது. மத்திய, மாநில அரசுகள் மேற்படி கொள்ளைகளை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் தமிழர் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.

4.    மக்கள் பிரச்சனைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும், காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிராகவும் போராடும் தமிழக கல்லூரி மாணவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை நாம் தமிழர் இளைஞர் பாசறை உறுதியாக எதிர்த்து போராடும். கல்லூரி நிர்வாகிகள் உடனடியாக மேற்படி நடவடிக்கைகளை நிறுத்திகொள்ளவும், மாணவர்கள் மீது எடுக்கபட்ட நடவடிக்கைகளை கைவிடவும் நாம் தமிழர் இளைஞர் பாசறை வலியுறுத்துகிறது.

 

கூட்டத்தில் மேற்கொள்ளபட்ட முடிவுகள்

7.    நாம் தமிழர் கட்சி –இளைஞர் பாசறையின் மாநிலம் தழுவிய அரசியல் மற்றும் தலைமைத்துவ மேம்பாடு பயிலரங்கு வருகிற நவம்பர் 30-டிசம்பர் 1 ஆம் தேதிகளில் பழநியில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

8.     எதிர் வரும் சனவரி 29 மாவீரன் முத்துக்குமார் நினைவுப் பொதுக்கூட்டத்தை கோவை ,திருப்பூர் மாவட்டங்கள் சார்பாக திருப்பூரில் நடத்த கட்சி்யின் தலைமை ஒருங்கிணைப்பாளரிடம் அனுமதி கோருவது என முடிவெடுக்கப்பட்டது.

9.    கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரின் இளைஞர் பாசறையினர் பிற மொழிச் சொல் கலவாது தமிழில் பேசுவது, எழுதுவது போன்றவற்றை தனது கட்டாய வாழ்வியல் நெறிகளாக கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

10. இளைஞர் பாசறை தளபதிகள், பொறுப்பாளர்கள், பாசறையினர் என அனைவரும் அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி ஆகியவற்றை அதன் பொருள்படும்படி முறையாக, ஒழுங்கமைவுடன் உச்சரிக்க உரிய பயிற்சி எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.

11. மாநில, மண்டல, மாவட்ட வாரிய இளைஞர் பாசறை பயிற்சி பயிலரங்கள்  கூட்டங்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

முந்தைய செய்திநீதிக்கான ஒரு விடுதலை வீரனின் சாவு அவன் சாவுடன் நின்று விடுவதில்லை – தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு
அடுத்த செய்திகாமன்வெல்த் கூட்டமைப்பு என்றால் என்ன?