தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழர் வரலாற்று பேராவணமாகும் -சீமான்!

85

தமிழ் தேசிய இனம் இந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை மறந்துவிட முடியாது முள்ளிவாய்க்காலில் இழந்த உயிர்களின் நினைவுகளையும் முத்துக்குமார் தொடங்கி தங்கள் உயிரினை தமிழிற்காக கொடுத்தவர்களின் படங்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளது முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் கொத்துக்குண்டுகளுக்கும் நச்சுக் குண்டுகளுக்கும் எவ்வாறு பலியானார்கள் என்பதை எடுத்துக்காட்டும் சிற்பங்கள் அங்கு காணப்படுகின்றது .

தஞ்சையில் எவ்வாறு மன்னர்கள் கட்டிய கோயில்கள் அடையாள சின்னமாக காணப்படுகின்றதோ அவ்வாறு தமிழ் தேசியஇனத்தின் ஒரு துயரஅடையாளமாக ஒருதேசிய இனம் தனது விடுதலைக்காக எவ்வளவு முழு ஈடுபட்டுடன் தன்உயிரினையும் முன்னிறுத்தி போராடியுள்ளது என்பதை இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் விளக்கி இருக்கின்றது.
இந்த திறப்பு நிகழ்விற்கு அனைத்து தமிழ்மக்களும் கலந்துகொள்ளவேண்டும் எதிர்காலப்பிள்ளைகள் தமிழினம் எவ்வளவு வலியுடன் இந்த விடுதலைக்காக போராடியுள்ளது என்பதை உணர்ந்துகின்றவகையில் இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

இந்தகார்த்திகை மாதத்தில் நடக்க இருக்கின்ற இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்வானது ஈழவிடுதலைக்கா போராடிய மாவீரர்களுக்கும் மக்களுக்கும் செலுத்தும் வணக்கமாகும்.

முந்தைய செய்திராஜபக்சாவுக்கு கிரீடம் சூட்டும் முயற்சிக்கு வைத்துள்ள ஆப்பு தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம்
அடுத்த செய்திதமிழக அரசின் தீர்மானம் ராஜபக்சவுக்கு கிரீடம் சூட்டும் முயற்சிக்கு வைக்கப்பட்ட ஆப்பு – சீமான்