உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை காண்க – நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்…

98

தமிழின உணர்வாய் வாழும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் இயக்கி
வெளியாகியுள்ள ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தை தமிழர்கள்
குடும்பம் குடும்பமாகச் சென்று திரையரங்கில் பார்த்திட வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள புனிதவதி என்கிற அந்தச்
சிறுமியின் துயரமிக்க வாழ்வு, நமது சொந்தங்கள் ஈழ மண்ணில் இன்றளவும்
அனுபவித்துவரும் துயரத்திற்கு ஒரு அத்தாட்சியாகும்.

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் மற்றுமொரு படமலல, அது நம் தமிழர்களின்
குருதி சிந்தும் வரலாற்றின் குறியீடு என்பதை உணர வேண்டும்

நாம் தமிழர் கட்சிக்காக,

செந்தமிழன் சீமான்

முந்தைய செய்திமூவர் உயிர் காக்க அலைபேசிக்கு தவறிய அழைப்பு கொடுங்கள்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
அடுத்த செய்திமுல்லைப் பெரியாறு விவகாரம்: தேனியில் தீக்குளித்த வாலிபர் ஜெயப்பிரகாஷ் உயிரிழந்தார்