அறிவிப்பு : நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு கட்சி தலைமை நிர்வாக அறிவிப்பு.

140

நாம்தமிழர் கட்சியின் சார்பாக நடக்கும் கலந்தாய்வுக்கூட்டம், பொதுக்கூட்டம், அரங்கக்கூட்டம் எதுவாக இருந்தாலும், முதலில் அகவணக்கம், இரண்டாவது வீரவணக்கம், முன்றாவது உறுதிமொழி எடுத்த பின்னர் நிகழ்ச்சியைத் தொடங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

அகவணக்கம்


தாயக விடுதலைக்குக் களமாடி உயிர் நீத்த பொதுமக்களுக்கும் எம்

தாய்த்தமிழ் உறவுகளுக்கும் ஒரு நிமிடம் அகவணக்கம்.

வீரவணக்கம்

நம் மொழி காக்க, நம் இனம் காக்க, நம் மண்காக்க, நம் மானம் காக்க

இன்னுயிர் ஈந்த மாவீரர் அனைவருக்கும் வீரவணக்கம் ! வீரவணக்கம் !!

உறுதிமொழி

மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடி சூடும் எம் தமிழ் மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தமிழர் வரலாற்றின் மீதும் உறுதி!

விழிமூடி துயில்கின்ற வீர வேங்கைகள் மீதும் உறுதி!

இனிமேலும் ஓயோம் !

இழிவாக வாழோம் ! உறுதி! உறுதி!!

வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை கட்டி எழுப்புவோம் தமிழர்

உலகத்தை !வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர்!

நாம்தமிழர் ! நாம்தமிழர் !! நாம்தமிழர்!!!

இப்படிக்கு

நாம் தமிழர் கட்சி தலைமை நிர்வாகம்


முந்தைய செய்தி31-7-11 அன்று வட சென்னை மாவட்டம், இராயபுரம் பகுதியில் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் மற்றும் “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் தமிழில் திரையிடப்படுகிறது.
அடுத்த செய்திதீரன் சின்னமலை விழா- கரூரில் வரும் ஆகஸ்ட் – 6 ஆம் தேதி செந்தமிழன் சீமான் பங்குபெறும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.