ஈரோடு மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளர் ராசா அவர்கள் கடந்த 29-06-11 ஞாயிறு அன்று இரவு 11 மணி அளவில் வெள்ளகோவில் அருகே பயணத்தில் இருந்த போது அவ்வழியே வந்த பேருந்து ராசா அவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த தலைகாயமுற்ற ராசா அவர்களை கோவை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.45 மணிக்கு ராசா அவர்களின் உயிர் பிரிந்தது.
சிறந்த களப்பணியாளரும் தமிழின உணர்வாளருமான 24 வயதேயான ராசாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த அயராது களப்பணியாற்றியவர்.
இன்று மாலை நடைபெறும் அவரது இறுதி நிகழ்வில் ஈரோடு மாவட்ட நாம்தமிழர் கட்சியினர்,உணர்வாளர்கள் திரண்டுவந்து வீரவணக்கம் செலுத்தினர்.
ராசா அவர்களுக்கு நாம் தமிழரின் வீரவணக்கம்!