நாம் தமிழர் கட்சியின் மண்டல அரசியல் பயிலரங்கு மற்றும் 8 மாவட்டங்களுக்கான இளைஞர் பாசறை கட்டமைப்பு- மன்னார்குடியில் நடக்கவுள்ளது.

56

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் வருகிற 31-05-2011 அன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோபாலசமுத்திரம் பகுதியில்  உள்ள ஸ்ரீ சாய்  திருமண மண்டபத்தில்  காலை 10 மணி முதல் நாம் தமிழர் கட்சியின் மண்டல அரசியல் பயிலரங்கும் , 8 மாவட்ட இளைஞர் பாசறை கட்டமைப்பும் நடைபெற உள்ளது.

அரசியல் பயிலரங்கு:

தலைமை : தென்றல் சந்திரசேகர் ( திருவாரூர் மாவட்ட அமைப்பாளர்)

முன்னிலை :  தமிழ்முழக்கம். சாகுல் அமீது – மாநில ஒருங்கிணைப்பாளர்.

வழக்கறிஞர். அ.நல்லதுரை – மாநில ஒருங்கிணைப்பாளர்.

சிறப்பு அழைப்பாளர்கள்:  கற்றறிந்த சான்றோர், புகழ்ப் பெற்ற பேராசிரியர்கள்.

இளைஞர் பாசறை கட்டமைப்பு:

பங்கேற்பு:  வழக்கறிஞர் மணி.செந்தில், வழக்கறிஞர் ராசீவ்காந்தி,

பேராசிரியர் கல்யாணசுந்தரம் – மாநில அமைப்பாளர்கள், இளைஞர் பாசறை

அரசியல் பயிலரங்கிலும், இளைஞர் பாசறை கட்டமைப்பு நிகழ்விலும் தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, கரூர், அரியலூர் ,பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் கலந்துக் கொள்ள உள்ளனர்.  அனைவரும் வருக.

தொடர்புக்கு : வழக்கறிஞர்.அ .நல்லதுரை – 9442317631.