கனடா நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தமிழரின் குரல்.

23

கனடா நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தமிழரின் குரல்:

தமிழீழத்தையும் தமிழகத்தையும் தாண்டி ஒரு தமிழரின் குரல் கனடா நாடாளுமன்றத்தில் ஒலிப்பது நமக்கு பெரு மகிழ்வை தருகிறது. தமிழகம் தமிழீழத்தின் குரலாக கனடா நாடாளுமன்றத்தில் ஒலிக்க இருக்கும் ராதிகா சிற்சபைஈசன் அவர்களின் வெற்றிக்கு நாம் தமிழர் கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.  அவரின் வெற்றிக்கு வாக்களித்த அனைத்து கனடாவாழ் தமிழ் உறவுகளுக்கும் நாம் தமிழர் கட்சி தனது நன்றியினை தெரிவித்து கொள்கிறது. மேலும் இனத்தின் குரலாய் கனடா நாடாளுமன்றத்தில் ஒலிக்க இருக்கும் ராதிகா அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி என்றும் துணை நிற்கும்.