நாம் தமிழர் கட்சியின் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான தளபதி புதுகோட்டை முத்துகுமார் வெட்டிகொலை

594

நாம் தமிழர் கட்சியின் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளரான தளபதி புதுகோட்டை முத்துகுமார் அவர்களை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார் அவர்கள் நேற்றிரவு தனது வாகனத்தில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சில நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே முத்துகுமார் அவர்கள் உயிரிழந்தார்.முத்துகுமாருடன் உடன் வந்த அவரது நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்துகுமார் அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு  நாம் தமிழர் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது.