27-1-2011 அன்று செந்தமிழன் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் அமிதாபுக்கு நன்றி தெரிவித்து தந்தி கொடுக்கின்றனர்

14


சென்ற ஆண்டு கொழும்பு நகரில் சிங்கள இனவெறி அரசின் தயவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கலந்து கொள்ள மறுத்தார் இந்தியாவின் மூத்த நடிகர் திரு. அமிதாப் பச்சன் அவர்கள். அவரது துணிச்சலான முடிவை ஒட்டுமொத்தத் தமிழினமும் பாராட்டியது.

அந்த திரைப்பட விழாவை நடத்துகிற அமைப்போ, மன சாட்சியே இல்லாமல், அமிதாபை அந்த விழாவின் சிறப்புத் தூதுவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தமிழரின் உணர்வுகளை மதித்த அமிதாபுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், ஆயிரக்கணக்கான நன்றி கூறும் தந்திகளை நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் 27.1.11 வியாழக்கிழமை கொடுக்க உள்ளனர். முதல் தந்தியை, சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் இருந்து காலை 10 மணிக்கு சீமான் கொடுக்க இருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சி.