மாற்றுத்திறனாளிகள் ஓட்டுனர் உரிமம் பெற விலக்கு அளிக்க வேண்டும் – செந்தமிழன் சீமான் அறிக்கை.

121

இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நிலை மிக மோசமான நிலையில் உள்ளது. அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.குறிப்பாக அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று, இரு சக்கர வாகனம் ஓட்டுவதில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள். கால்கள் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் இரண்டு சக்கர வாகன்ங்கள் ஓட்ட முடியாத நிலையில் 4 சக்கர வாகன்ங்களை ஓட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஆனால் அதற்கு அவர்கள் சட்டரீதியாக பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைச் சந்திகின்றனர்.வாகன ஆய்வாளர்கள் மாற்றுத்திறனாளிகளின் 4 சக்கர வாகனங்களை சட்ட விதிமுறைகளைக்காட்டி பதிவு செய்ய மறுத்து விடுகின்றார்கள்.அதைப்போல 4 சக்கர வாகன்ங்களை ஒட்டி ஓட்டுனர் உரிமமும் பெற முடியாத நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது. இவ்வாறு வாகனக்களைப் பதிவு செய்யாததால் அவர்கள் தங்கள் வாகனங்களுக்கு காப்பீடு செய்யவோ வாகன ஓட்டுனர் உரிமம் பெறவோ,ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உரிய இழப்பீடோ,சட்டப்பாதுகாப்போ பெற முடிவதில்லை.தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் இத்தகைய சிக்கல்கலைச் சந்திக்கின்றனர்.இது குறித்து அரசிடம் பல முறை எடுத்துக்கூறியும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் கண்டு கொள்ளப்படாத நிலை உள்ளது.

மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு திருத்தம் சொல்வதிலும் திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதிலும்,தனக்கான பாராட்டு விழாக்களை நடத்துவதிலும் காட்டும் ஆர்வத்தை தனது துறையின் குறைகளைக் களைவதிலும் முதல்வர் காட்ட வேண்டும்.ஆகவே 4 சக்கரம் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளைத் தளர்த்தி உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன்.