தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறையின் கூடுதல் அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

66

க.எண்: 2025080746

நாள்: 28.08.2025

அறிவிப்பு:

குருதிக்கொடைப் பாசறை
அவசரகால உதவி மையம் விரிவாக்கம்

நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை கடந்த 15 ஆண்டுகளாக உயிர்காக்கும் உயரிய சேவையில் தன்னிகரற்று விளங்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நாளுக்கு நாள் குருதிக்கான தேவையும் அதனை நிறைவு செய்யவேண்டிய இனமான சேவையும் அதிகரித்து வருவதால். குருதிக்கொடைப் பாசறையின் கூடுதல் அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குருதித் தேவைக்கும், குருதிக்கொடை வழங்கவும், குருதிக்கொடை முகாம்கள் அமைக்கவும் கீழ்க்காணும் அவசரகால உதவி மைய எண்களில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குருதிக்கொடைப் பாசறையின் அவசரகால உதவி மையத்தின் பணிகளுக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

தொடர்புக்கு:

திலீபன் குடில்

குருதிக்கொடைப் பாசறை தலைமை அலுவலகம்

+91 8925531100 / 7200800882
+91 9841186128 / 8122540511
+91 9789277614 / 7667412345

 

அரிமா மு.ப.செந்தில்நாதன்
குருதிக்கொடைப் பாசறை – மாநிலச் செயலாளர்

 

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்குத் துயர்துடைப்புத்தொகையாக 2 கோடி ரூபாய் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் மண்டலம் (ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்