தலைமை அறிவிப்பு – அவசர சுற்றறிக்கை: வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள்

8

நாள்: 02.01.2026

அன்பு உறவுகளுக்கு வணக்கம்!
அவசர சுற்றறிக்கை:
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 66 இலட்சம் பேர் முகவரி இடம் மாறி சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு சனவரி 18-ந்தேதி வரை ஒரு மாத காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய நாளையும் (03-01-2026 சனி), நாளை மறுநாளும் (04-01-2026 ஞாயிறு) தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
எனவே, நமது கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் வாக்கக நிலை முகவர்கள் (BLA1) ஆகியோர் தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்ககங்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுதலாக பெயர் இடம்பெறாமல் போனவர்களுக்கு இந்த சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேவையான வழிகாட்டு உதவிகளைச் செய்துகொடுத்து, நம் உறவுகளின் வாக்குரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனவும், தங்கள் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்ககங்களுக்கும் கட்சி சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வாக்கக நிலை முகவர்கள் (BLA2) பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணையத்தில் வழங்கி பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், ஏற்கனவே வழங்கிய BLA2 பட்டியல் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மற்றும் BLA2 பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டது தொடர்பான தகவல்களை தலைமை அலுவலகத்திற்கு உரிய முறையில் தெரிவித்து, இப்பணியை சிறப்புற செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திருவாடானை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இராணிப்பேட்டை ஆற்காடு மண்டலம் (ஆற்காடு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025