எழுகதிர் இதழின் ஆசிரியர் பெருந்தமிழர் ஐயா அருகோ அவர்களின் இன்னுயிர் காத்திட உதவுவோம்! – சீமான் கோரிக்கை

0

தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சிக்காகவும் தம் வாழ்நாள் முழுவதையும் ஒப்பிவித்து வாழ்ந்த பெருந்தகை, திராவிட திரிபுவாதம் குறித்து தமிழினம் விழிப்புணர்வுப் பெற அரை நூற்றாண்டுகளாக ‘எழுகதிர்’ இதழைத் தொய்வின்றி நடத்திவரும் பெருந்தமிழர், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா அருகோ அவர்கள் உடல் நலிவுற்று தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி பெருங்கவலையை அளிக்கிறது.

நம்முடைய ஐயா அருகோ அவர்கள் தமிழினம் போற்றி பாதுகாக்க வேண்டிய அறிவுப் பெட்டகமாவார். ஐயா அவர்கள் எந்நாளும், எவரிடத்தும், எதன்பொருட்டும், எதையும் எதிர்ப்பார்த்து நின்றிடாத மானத்தமிழர். பொதுவாழ்வில் எளிமையும், நேர்மையும் கொண்டு தமிழ்த்தொண்டு ஆற்றிவந்த ஐயா அவர்களின் குடும்பம் வறுமைச்சூழல் காரணமாக, உயிர் காக்கும் மருத்துவச் செலவினைக் கூட செய்ய இயலாத பெரும் பொருளாதார நெருக்கடியில் தற்போது தவித்து நிற்கிறது. திராவிடத் திருகுத்தனங்களைத் தோலுரித்து சமகால அரசியல் வரலாற்றின் உயிர்ச்சான்றாக திகழும் ஐயா அவர்களின் உயிர் காக்க உதவிட வேண்டியது ஒவ்வோரு தமிழரின் கடமையாகும்.

ஆகவே, என் அன்பிற்கினிய தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் தங்களால் இயன்ற நிதியுதவி செய்து, ஐயா அருகோ அவர்களின் இன்னுயிர் காத்திட வேண்டுமென கோருகிறேன்.

நிதியுதவி செய்ய வேண்டிய
வங்கி கணக்கு எண் : 34915596308
பெயர்: அருகோ.தமிழ்ச்செல்வன் (G.Tamilselvan)
IFSC CODE : SBIN0011605
GPAY: 9566228370

https://x.com/Seeman4TN/status/1980571256262111669

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

முந்தைய செய்தி‘வனக்காவலன்’ ஐயா வீரப்பனார் நினைவிடத்தில் சீமான்!
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – செயற்களம் செயலியில் கிளைக் கட்டமைப்பு விவரங்களைப் பதிவேற்றுவது தொடர்பாக