தலைமை அறிவிப்பு – செம்மணிப் படுகொலைகளைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

47

க.எண்: 2025070681

நாள்: 21.07.2025

அறிவிப்பு:

செம்மணிப் படுகொலைகளைக் கண்டித்து
மாபெரும் ஆர்ப்பாட்டம்கண்டனவுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாள்:
ஆடி 10 | 26-07-2025 பிற்பகல் 02 மணியளவில்

இடம்:
சிவானந்தா சாலை
(ஓமந்தூரார் மருத்துவமனை அருகில்) சென்னை

 

ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி இடுகாடு அருகே அண்மையில் குழந்தை உட்பட 5 தமிழர்களின் எலும்புக் குவியல்கள் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி உட்பட மறைக்கப்பட்டுள்ள அனைத்து மனிதப்புதைகுழிகள் குறித்து பன்னாட்டு சுதந்திர விசாரணை நடத்தக்கோரி நடைபெற்றுவரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி சார்பாக (ஆடி) 10 ஆம் நாள் (26.07.2025) பிற்பகல் 02 மணியளவில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் சிவானந்தா சாலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்