க.எண்: 2025070666
நாள்: 14.07.2025
அறிவிப்பு:
எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர்122ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: ஆனி 31 | 15-07-2025 காலை 10 மணியளவில் இடம்: |
எழுத்தறிவித்த இறைவன் நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக
ஆனி 31 ஆம் நாள் (15.07.2025) காலை 10 மணியளவில் சென்னை,
கிண்டியில் அமைந்துள்ள ஐயாவின் நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி