ஐயா இறைநேசர் ஹாஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு மறைவு: சீமான் கண்ணீர் வணக்கம்

8

தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி பெருமதிப்பிற்குரிய ஐயா இறைநேசர் ஹாஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

ஏக இறைவனின் அருளாற்றல் எல்லா மக்களுக்கும் கிடைத்திட எந்நாளும் மறைமொழி பகர்ந்த அருட்செல்வர்!

இறைத்தொண்டு புரிவதையே வாழ்வின் பெரும்பயனாக வரித்துகொண்ட பெருந்தகை!

இசுலாமிய மார்க்க கல்வியின் மணிமகுடமாய் விளங்கும் எகிப்து நாட்டின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அல் இஜாசதுல் ஆலியா பட்டம் பெற்ற இசுலாமியப் பேரறிஞர்!

மார்க்கத்தின் வழிநின்று மனிதம் போற்றிய மாமனிதர், ஆகச்சிறந்த கல்வியாளர்,
முப்தி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்களின் மறைவு இசுலாமியச் சொந்தங்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த
தமிழ்நாட்டிற்கே ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்!

ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இசுலாமியச்சொந்தங்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

தலைமை ஹாஜியார் போற்றுதற்குரிய ஐயா இறைநேசர் முப்தி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

https://x.com/Seeman4TN/status/1926538530911580382

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவடசென்னையை நாசமாக்கும் கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – விருதுநகர் அருப்புக்கோட்டை மண்டலம் (அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025