ஈரோடு கிழக்கு இடைதேர்தல் – 2025! – சீமான் தலைமையில் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டங்கள்!

52

வருகின்ற 05-02-2025 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘ஒலிவாங்கி (மைக்)’ சின்னத்தில் போட்டியிடுகின்ற மா.கி.சீதாலட்சுமி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், 24-01-2025 தொடங்கி 03-02-2025 வரை, கருங்கல்பாளையத்தில், சூரம்பட்டி நான்கு சாலையில், காளை மாடு சிலை அருகில், சம்பத் நகர், இந்து கல்வி நிலையம் பகுதி, நரிக்கல் மேடு, குமலன்குட்டை பகுதி, அக்ரஹாரம் பகுதி, முனிசிபல் சத்திரம் பகுதி, வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையம் பகுதி, மற்றும் ஈ.வே.ரா. பெரியார் நகர் பகுதியில் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திபேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிமுக அரசு மக்காச்சோளத்திற்கு 1% கூடுதல் வரி விதித்துள்ளது வேளாண் பெருங்குடி மக்களின் உழைப்பினை உறிஞ்சும் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம்