கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியைச் சேர்ந்த 42 மாணவ மாணவியர் கேரளாவுக்குச் சுற்றுலா சென்ற நிலையில், குண்டள அணைக்கட்டு அருகே அவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து, சுதன், ஆதிகா, வெனிகா ஆகிய 3 மாணவ மாணவியர் உயிரிழந்து, 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து பெருந்துயர நிகழ்வறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த மாணவ – மாணவியரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், உடன் பயிலும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியருக்கு உயர் சிகிச்சை அளிப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
உயிரிழந்த மாணவச் செல்வங்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி