ஈரோடு பெருமாள்மலைப் பகுதி பூர்வகுடிகளுக்கு சொந்தமான குடியிருப்புகளை வெளியேற்ற முயற்சி! – மக்களின் கோரிக்கைகளுக்கு சீமான் நேரில் ஆதரவு!

5

ஈரோடு பெருமாள்மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் என்று கூறி வாடகை செலுத்த வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என வலுக்கட்டாயமாக நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறது திமுக அரசு.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள பெருமாள்மலை மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 30-01-2025 இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பெருமாள்மலைக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். உடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி மற்றும் ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர்கள் இருந்தனர்.

முந்தைய செய்திதிமுக ஆட்சியில் நிகழும் அத்தனை அட்டூழியங்களுக்கும் மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்! – சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திஐயா மாவை. சோ.சேனாதிராசா அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!