அறிவிப்பு: பெரும் பாவலன் பாட்டன் பாரதி பெரும்புகழ் போற்றும் வீழ்வேனென்று நினைத்தாயோ! – மாபெரும் பொதுக்கூட்டம் | சென்னை வண்ணாரப்பேட்டை

60

க.எண்: 2024120353

நாள்: 09.12.2024

அறிவிப்பு:
(நாள் மாற்றம்)

பெரும் பாவலன் பாட்டன் பாரதி பெரும்புகழ் போற்றும்
வீழ்வேனென்று நினைத்தாயோ!

மாபெரும் பொதுக்கூட்டம்

புகழுரை:

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

இடம்:
வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில்,
துறைமுகம் தொகுதி – தங்கச் சாலை

நாள்:
கார்த்திகை 30 |
15-12-2024 | மாலை 05 மணியளவில்

பெரும் பாவலன் பாட்டன் பாரதியாரின் 142ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக 11-12-2024 அன்று சென்னை துறைமுகம் தொகுதி, வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் தங்கச் சாலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருந்த வீழ்வேனென்று நினைத்தாயோ? பொதுக்கூட்டம் புயல் மழை காரணமாக நாள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்ற 15-12-2024 அன்று நடைபெறவிருக்கின்றது.

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதெய்வத்திருமகன் பசும்பொன் ஐயா முத்துராமலிங்கத்தேவர் குறித்து அவதூறுப் பேச்சு; தமிழ்த்தலைவர்களை எவர் இழிவுபடுத்தினாலும் ஏற்க முடியாது! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திசீமான் தலைமையில் அரிட்டாப்பட்டியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!