மதுரை மாவட்டம் அழகர்மலைக்கு அருகேயுள்ள அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து, அங்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் தனியார் நிறுவனத்திற்கு இந்திய ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ள அனுமதியை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை தடுத்துநிறுத்த வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக 13-12-2024 அன்று, காலை 10 மணியளவில் மதுரை மாவட்டம், மேலூர் பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.