ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு கோலடி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்படும் என்று திமுக அரசால் ஒட்டப்பட்ட அறிவிக்கையால் அச்சமுற்று இன்னுயிரை மாய்த்துக்கொண்ட திருவேற்காடு கோலடி பகுதி செந்தமிழ் நகரைச் சேர்ந்த சங்கரின் உடலுக்கு 19-11-2024 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இறுதி வணக்கம் செலுத்திவிட்டு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறி, கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார்.