சேலம் மாவட்டம் பூரண மதுவிலக்கு கோரி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுக்கும் நிகழ்வு

69

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப் படுத்தக்கோரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களின் ஆதரவை பெற்று 12/6/2023 இன்று மகளிர் பாசறை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளிக்கப்பட்டது.

மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஸ்ரீ ரத்னா அல்லிமுத்து அவர்களின் தலைமையில் வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா ராசா அம்மையப்பன் மற்றும் சேலம் பாராளுமன்ற பொறுப்பாளர் பொன். பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் சேலம் மாவட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் பங்கெடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.