நாள்: 04.06.2023
அறிவிப்பு:
ஓடிசா தொடர்வண்டி விபத்தில் சிக்கிய உறவுகளின்
உயிர் காக்க குருதிக் கொடை வழங்க படை திரள்வோம்!
ஓடிசா மாநிலத்தில் நிகழ்ந்த தொடர்வண்டி விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த உறவுகளை சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் இராயப்பேட்டை மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுகின்றனர். படுகாயமடைந்தவர்களின் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்கு குருதித் தேவை என்பது மிக அவசர, அவசிய பெருமளவு தேவையாக உள்ளது.
அரசியல் என்பது ‘அனைத்து உயிர்களும் நல்வாழ்வுக்கான தேவையை நிறைவு செய்கின்ற சேவைதான்’ என்ற புனித இலட்சியத்தோடு உயிர்மநேய அரசியல் தொண்டாற்றி வரும் நாம் தமிழர் கட்சி தமது படைப்பிரிவின் ஒரு பகுதியாக குருதிக்கொடைப் பாசறையைத் தொடங்கி, கடந்த 11 ஆண்டுகளாகப் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒடிசா தொடர்வண்டி விபத்தில் சிக்கிய உறவுகளின் உயிர் காக்க, நமது குருதிக்கொடைப் பாசறையினர் மேற்கண்ட மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்கியும், குருதிக்கொடை வழங்கும் பணியை ஒருங்கிணைத்தும் வருகின்றனர்.
எனவே, நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும், என்னுயிருக்கினிய அன்புத் தம்பி – தங்கைகளும், நாம் தமிழர் உறவுகளும் உடனடியாக தொடர்புடைய மருத்துவமனைகளில் உள்ள நம்முடைய குருதிக்கொடை பாசறையினரைத் தொடர்புகொண்டு, குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் உன்னதப் பணியாற்றுமாறு உங்கள் அனைவரையும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தொடர்புக்கு,
அரிமா மு.ப.செந்தில்நாதன் 7667412345
(குருதிக்கொடைப் பாசறை மாநிலச் செயலாளர்)
திலீபன் குடில் – 044 47731100
ஸ்டான்லி மருத்துவமனை
நிர்மலா 8940718454
நித்தியானந்தம் 8428862623
அரவிந்த் 9840668486
அஜீத்குமார் 9840318472
சுரேஷ்குமார் 9962646434
விக்னேஷ் 9003296749
- இராஜீவ்காந்தி மருத்துவமனை
ஈகை மணி 8122540511
முத்துராமலிங்கம் 7395951028
- கீழ்ப்பாக்கம் மருத்துவமனை
இராஜேஷ் 789277614
சாந்தி 9941839243
கமலசேகர் 9840295051
லோகேஷ்கண்ணன் 9840584074
- ஓமந்தூரார் மருத்துவமனை
சுகுமார் 9841186128
அவியூர்தினேஷ் 9551495846
ஸ்டீபன் 9094086664
இளையராஜா 9941888706
- இராயப்பேட்டை மருத்துவமனை
ஈகை புனிதா 9025842180
பிரான்சிஸ் 9941464839
அஜீஸ் அகமது 7092537711
பிரதீப் 9500191827