சுற்றறிக்கை: எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஏப்ரல் 30, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

253

க.எண்: 2022040185
நாள்: 27.04.2022

சுற்றறிக்கை:

எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின்
கடும் விலை உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில்
ஏப்ரல்
30, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மக்களை வாட்டி வதைக்கும் வகையில் கடுமையாக உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிகாற்று உருளை போன்ற எரிபொருட்களின் விலை, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, சொத்துவரி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து, வருகின்ற ஏப்ரல் 30 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 30 அன்று, மாலை 03 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெறவிருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மட்டும் தவிர்க்கவியலா காரணங்களினால் ஒத்திவைக்கப்படுகிறது. மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும்.

மாவட்டவாரியாக கீழ்காணும் பொறுப்பாளர்களின் தலைமையில் மாவட்டத் தலைநகரங்களில் ஏப்ரல் 30 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கிறது.

வ.எண் மாவட்டம் தலைமை சிறப்புரை
1 திருவள்ளூர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை இரா.அன்புத்தென்னரசன்
2 காஞ்சிபுரம் சா.சால்டின் தே.இனியன் ஜான்
3 செங்கல்பட்டு ஈரா.மகேந்திரன் செ.இராஜன்
வ.எண் மாவட்டம் தலைமை சிறப்புரை
4 வேலூர் வழக்கறிஞர் நா.பூங்குன்றன் இரா.பிரகலதா
5 இராணிபேட்டை கா.மு.தெளபிக் பிக்ரத் ந.சல்மான்
6 திருப்பத்தூர் இரா.கருணாநிதி ச.சுரேசுகுமார்
7 கிருஷ்ணகிரி கரு.பிரபாகரன் இரா.மேரி செல்வராணி
8 தர்மபுரி வழக்கறிஞர் பு.அண்ணாதுரை
9 திருவண்ணாமலை சு.சிவானந்தம் மருத்துவர் இரமேஷ் பாபு
10 விழுப்புரம் மருத்துவர் ச.விஜய்விக்ரம் பா.கெளரி (புதுச்சேரி)
11 கள்ளக்குறிச்சி தா.காசிமன்னன் சு.ரஜியாமா
12 சேலம் பொ.பாலசுப்ரமணியன் இராசா அம்மையப்பன்
13 நாமக்கல் மருத்துவர் பா.பாஸ்கர் சு.இரமேசு (எ) இளஞ்செழியன்
14 ஈரோடு சே.நவநீதன் ப.நித்தியானந்த்
15 திருப்பூர் வான்மதி.த.வேலுச்சாமி சு.சுப்பிரமணியன்
16 நீலகிரி பி.பெஞ்சமின் பிராங்கிளின் இரா.நர்மதா
17 கோயமுத்தூர் அ.அப்துல் வகாப் க.சண்முகசுந்தரம்
18 திண்டுக்கல் அ.சைமன் ஜஸ்டின் வழக்கறிஞர் கணேசன், பா.வெ.சிவசங்கரன்
19 கரூர் புதுக்கோட்டை த.சசிகுமார் மருத்துவர் கருப்பையா,
20 திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் இரா.பிரபு மு.இ.ஹுமாயூன் கபீர்
21 புதுக்கோட்டை சு.தனசேகரன் சேது.மனோகரன்
22 பெரம்பலூர் இரா.வந்தியதேவன் ஆ.சிவக்குமார்
23 அரியலூர் நீல.மகாலிங்கம் வா.செங்கோலன்,
24 கடலூர் செ.தமிழ் ந.அமுதா நம்பி,
25 மயிலாடுதுறை சு.கலியபெருமாள் மருத்துவர் மு.முகம்மது சர்வத்கான்
வ.எண் மாவட்டம் தலைமை சிறப்புரை
26 நாகப்பட்டினம் ச.கட்டப்பிள்ளைஅப்பு பி.காளியம்மாள்
27 திருவாரூர் ந.கிருஷ்ணகுமார் இர.வினோதினி
28 தஞ்சாவூர் மு.கந்தசாமி வழக்கறிஞர் மணிசெந்தில்
29 சிவகங்கை க.சாயல்ராம் லெ.மாறன்
30 மதுரை வி.சிவானந்தம் செ.வெற்றிக்குமரன்
31 தேனி மு.பிரேம்சந்தர்
32 விருதுநகர் வழக்கறிஞர் வ.ஜெயராஜ்
33 இராமநாதபுரம் க.குமரவேல் களஞ்சியம் சிவக்குமார்
34 தூத்துக்குடி சா.கிறிஸ்டன்டைன் ராஜசேகர் கா.வள்ளியம்மாள்
சு.அன்னலெட்சுமி,
35 தென்காசி ச.அருண்சங்கர் இசை சி.ச.மதிவாணன்
36 திருநெல்வேலி பா.சத்யா அ.சகாய இனிதா
37 கன்னியாகுமரி சு.ஜெகன்நாதன் ஸ்.ஆன்றனி ஆஸ்லின்

ஒருங்கிணைந்த மாவட்டத் தலைநகரங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் குறித்து, தத்தம் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, நாடாளுமன்ற, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு, ஆர்ப்பாட்ட நிகழ்விட அனுமதி மற்றும் ஏற்பாடுகள் குறித்த தகவல்களை முன்னதாகவே தலைமை அலுவலகத்திற்கு உரிய முறையில் தெரியப்படுத்தவேண்டும் எனவும், கண்டன ஆர்ப்பாட்டங்களைப் பேரெழுச்சியாக நடத்திட நகரம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி