சுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக

294

க.எண்: 2022040156

நாள்: 06.04.2022

சுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக

நாம் வழங்கும் குருதிக்கொடையின் ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்! மக்களை ஒன்றிணைக்கும்! என்ற உயரிய நோக்கில் மிகச்சிறப்பாக மக்கள் பணியாற்றிவரும் நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையின் கட்டமைப்பை விரிவாக்கும் வகையில், தமிழ்நாடு முழுமைக்கும் பொறுப்பாளர்களை நியமனம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு, நாம் தமிழர் கட்சியின் மாநில, நாடாளுமன்றத் தொகுதி, மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்களுக்குள் கலந்தாய்வு செய்து, முதற்கட்டமாக குருதிக்கொடைப் பாசறைக்கான மாவட்டப் பொறுப்புகளுக்கு (மாவட்டச் செயலாளர், இணைச்செயலாளர் மற்றும் துணைச்செயலாளர்) ஏற்ற நபர்களை உரிய முறையில் தேர்வு செய்து அவர்களது பெயர், உறுப்பினர் எண், அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களோடு விரைந்து பரிந்துரை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பரிந்துரைக்கப்படும் குருதிக்கொடைப் பாசறையின் மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.

எனவே, தத்தம் மாவட்டத்திற்குரிய குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்புகளுக்கான பரிந்துரைகளை, கீழ்க்காணும் அட்டவணையில் உள்ளவாறு மாவட்டவாரியாக நியமிக்கப்பட்டுள்ள குருதிக்கொடைப் பாசறையின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு விரைந்து அனுப்பி வைக்கவேண்டுமெனவும், குருதிக்கொடைப் பாசறையின் கட்டமைப்பு விரிவாக்கத்திற்கான இச்செயற்திட்டத்திற்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மாவட்டவாரியாக அணுக வேண்டிய குருதிக்கொடைப் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள்:

பெயர் தொடர்பு எண் மாவட்டங்கள்
1 க.மணிகண்டன் 8122540511 சென்னை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை
2 ஜெ.சுகுமார்  9841186128
3 நா.நித்தியானந்தம் 8428862623 திருவள்ளூர், செங்கல்பட்டு விழுப்புரம், திருப்பத்தூர்
4 கு.சாமிநாதன் 8825293305 நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி  தருமபுரி, கிருஷ்ணகிரி
5 பா.அவினாஸ் 9629590602 கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு
6 இரா.மோகன்ராஜ் 9566575582 கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை
7 வே.அருள்தேவா 6380768859
8 கி.வினோத்குமார் 9597861586 திருச்சி, கரூர்
9 பா.கோகுல் குமார் 8144773092
10 மு.சாகுல் அமீது 9842188686 மதுரை, தேனி, திண்டுக்கல்
11 து.தமிழரசன் 7502242823
12 மு.மாரியப்பன்  9507815767 விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி,  தூத்துக்குடி
13 ம.ஜெயசுந்தர் 9500168863
14 து.வெங்கடேசன்  9578963393 புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்
15 ப.அன்பழகன் 8838853415 நாகப்பட்டினம், திருவாரூர்
16 தை.மலர் மாணிக்கம்  9943980368 பெரம்பலூர், அரியலூர்
17 அமுதன் பாலா 9043214123 பாண்டிச்சேரி, காரைக்கால்
18 மு.வேலவன் 8695808979
19 அ.பூமணி 7867870772

 சீமான்
 தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி