அறிவிப்பு: அக்.31, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம் | நாம் தமிழர் கட்சி

776

அறிவிப்பு: அக்.31, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர்கோட்டம் | நாம் தமிழர் கட்சி

இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலைச்
செய்யப்படுவதைக் கண்டித்தும், கூடங்குளத்தில் அணுக்கழிவு கையம் அமைக்கவிருக்கும்
ஒன்றிய அரசைக் கண்டித்தும், வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ ஒன்றிய அரசு
உடனடியாகத் திரும்பப் பெறக்கோரியும், எதிர்வரும் 31.10.2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை
10 மணியளவில், சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்களது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெறவிருக்கின்றது.

கண்டன உரையாற்றுபர்கள்:
தமிழ்த்திரு. அ.வினோத்,
மாநிலப் பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
தமிழ்த்திரு. சோழன் மு.களஞ்சியம்,
நிறுவனர் / தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்
தமிழ்த்திரு. செ.முத்துப்பாண்டி
நிறுவனர் / தலைவர், மருது மக்கள் இயக்கம்
தமிழ்த்திரு. சாகுல் அமீது
நிறுவனர் / தலைவர், இஸ்லாமிய சேவா சங்கம்
தமிழ்த்திரு. பொ.மு.இரணியன்
நிறுவனர் / தலைவர், வனவேங்கைகள் கட்சி

இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி