முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களது துணைவியார் மறைவு! – சீமான் நேரில் சென்று ஆறுதல்

109

செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களது துணைவியார் மறைவு – சீமான் நேரில் சென்று ஆறுதல் நாம் தமிழர் கட்சி

முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில் உள்ள பன்னீர்செலவம் அவர்களது இல்லத்தில் நேரில் சென்று ஆறுதலைத் தெரிவித்தார்.

இதுகுறித்து சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள துயர் பகிர்வு செய்தியில் கூறியிருப்பதாவது,

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஐயா ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் அம்மையார் விஜயலட்சுமி அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற  செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

வாழ்க்கைத்துணையை இழந்து பெருந்துயருற்றுள்ள ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தாயை இழந்து வாடும் தம்பிகள்  ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், தங்கை கவிதா ஆகியோருக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மையார் விஜயலட்சுமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்.

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திசங்கத்தமிழ் இலக்கியங்களை ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாளப்படுத்தும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திபாட்டனார் பூலித்தேவன் புகழ்வணக்கம் – பொன்பரப்பி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு