முதல்வர் ஸ்டாலினுடன் சீமான் சந்திப்பு – கொரோனா துயர்துடைப்பு நிதிக்காக ரூபாய் 5 இலட்சம் வழங்கினார்

382

செய்திக்குறிப்பு: முதல்வர் ஸ்டாலினுடன் சீமான் சந்திப்பு – கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 இலட்சம் வழங்கினார் | நாம் தமிழர் கட்சி

இன்று 04-06-2021, தலைமைச் செயலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக 5 இலட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இச்சந்திப்பின் போது உடனிருந்த இயக்குநர் பாரதிராஜா அவர்களும் தனது சார்பில் ரூபாய் 5 இலட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இச்சந்திப்பின்போது, 161வது, சட்டப்பிரிவின் படி அமைச்சரவையைக் கூட்டி ஏழு தமிழர்களையும் விடுதலையைச் சாத்தியப்படுத்தவேண்டும் எனவும், கொரோனா தீவிர நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கும் தமிழ் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் இணையவழி வகுப்புகளுக்கான கல்விக்கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்து ஒரு வரையறைக்குள் கொண்டுவரவேண்டும் எனவும், தேர்வுகளைவிட மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டி, கொரோனா பரவல் குறையும்வரை 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகளை ஒத்திக்வைக்கவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல் நிகழ்வு
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி செவிலியர்களுக்கு முகக்கவசம் வழங்கல்