தலைமை அலுவலக அறிவிப்பு: மேன்மைமிகு அடையாளங்களை உரிய முறையில் பயன்படுத்துவோம்

13

தமிழீழ தேசியக் கொடி,
தமிழ்தேசியத் தலைவரின் உருவம், புலிக்கொடி உள்ளிட்ட நம் போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரிய மேன்மைமிகு அடையாளங்களை முக கவசம் உள்ளிட்டவற்றில் பதிந்து பயன்படுத்துவது என்பது முற்றாக தவிர்க்கப்பட வேண்டியது.

ஆர்வமிகுதியால் சிலர் அறியாது செய்யும் இதுபோன்ற தவறுகள், நம் மதிப்புக்குரிய அடையாளங்களை அவமதிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளுக்கு சிறிதும் இடங்கொடுக்க கூடாது என்று கடுமையாக அறிவுறுத்தப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி
தலைமை அலுவலக செய்திக்குறிப்பு.