சுற்றறிக்கை: வீரத்தமிழர் முன்னணி – மாநிலக் கலந்தாய்வு

158

சுற்றறிக்கை: வீரத்தமிழர் முன்னணி – மாநிலக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி

தமிழர்களின் வரலாறு மற்றும் பண்பாட்டு மீட்பு பயணத்தில் வீரத்தமிழர் முன்னணி தனது தொடர் செயல்பாட்டினால் தனித்த மற்றும் தவிர்க்க முடியாத இடத்தினை பெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் நமது வரலாற்றை மீட்கவும், தமிழர்களின் வரலாற்றை மற்றவர்களின் திருட்டில் இருந்து காப்பாற்றவும் வீரத்தமிழர் முன்னணியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வீரத்தமிழர் முன்னணியின் தத்துவ நிலைப்பாட்டை உணர்தல் என்ற இரண்டும் அவசியமாகிறது. இந்த காலத்தேவையை நிறைவுசெய்யும்பொருட்டு வருகின்ற 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை, காலை 09 மணியளவில் தொடங்கி பிற்பகல் 2.30 மணிவரை திருச்சியில் (திருச்சி – தஞ்சை முதன்மை சாலையில்) உள்ள சிங்கார மகாலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரத்தமிழர் முன்னணியின் மாநிலக் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்விற்காக வேண்டப்படுவது:
வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதிச் செயலாளர்கள் என அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள வீரத்தமிழர் முன்னணியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதிச் செயலாளர்களின் கலந்தாய்விற்கான வருகையை உறுதிசெய்வதோடு மட்டுமின்றி தாங்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
நாம் தமிழர் கட்சியின் மாவட்ட/தொகுதிச் செயலாளர்கள், தாங்கள் சார்ந்த சட்டமன்றத் தொகுதியிலோ, அல்லது மாவட்டத்திலோ வீரத்தமிழர் முன்னணி பொறுப்பில் இதுவரை எவரும் இல்லையென்றால், உடனடியாக பொறுப்பாளரை அடையாளப்படுத்தி, பொறுப்பாளர்களோடு இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து பாசறைகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரும் இந்த கலந்தாய்வில் கலந்துகொண்டு, வீரத்தமிழர் முன்னணியின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.
நிகழ்வு தொடக்கம் மற்றும் நிறைவு சரியான நேரத்தில் அமையும் என்பதால், அனைவரும் குறித்த நேரத்தில் அரங்கிற்கு வந்துவிட வேண்டுகிறோம்.
நன்றி!

தொடர்புக்கு:
முனைவர் செந்தில்நாதன் +91-94422 48351,
மாநில ஒருங்கிணைப்பாளர், வீரத்தமிழர் முன்னணி


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி