அறிவிப்பு: தைப்பூசம் – வேல் வழிபாடு | பழனி நடைபயணம்

90

தைப்பூசம் l வேல் வழிபாடு l பழனி நடைபயணம்
பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்கிற நாம் தமிழர் கட்சியின் மெய்யியல் மீட்சிக்கான பாசறை,”வீரத்தமிழர் முன்னணி”யின் கொள்கை முழக்கத்திற்கேற்ப குறிஞ்சித்திணை தலைவன், நமது முப்பாட்டன் முருகப் பாட்டனின் புகழைப்போற்றும் வகையில் கோவை மற்றும் நீலமலை மாவட்டம் சார்பாக “வேல் வழிபாடு” மற்றும் “பழனி நடைப்பயணம்”
ஆகியவை முன்னெடுக்கப்படுகிறது.

மாவட்டம் மற்றும் தொகுதி வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள் பிப்ரவரி 3ம் நாளிலிருந்து பிப்ரவரி 5ம் நாள் வரை மூன்று நாட்கள் பல்வேறு இடங்களில் வேல் வழிபாட்டை முன்னெடுக்க வேண்டும்.

பழனி நடைப்பயணம் பெரிய நாய்க்கன்பாளையம் பகுதியில் உள்ள கருப்பராயன் கோவிலில் பிப்ரவரி 6ம்நாள்
காலை 11.00மணியளவில் கலை நிகழ்ச்சிகளோடு தொடங்கவுள்ளது. நீலமலை, மேட்டுப்பாளையம்,கவுண்டம்பாளையம் தொகுதி உறவுகள் கலந்து கொள்கிறார்கள்.

அடுத்த சந்திப்பான காந்திபுரத்தில் கோவை வடக்கு,கோவை தெற்கு தொகுதி உறவுகள்
பறையிசை இசைத்து வரவேற்பு கொடுத்து,
கலந்து கொள்கிறார்கள்.

அடுத்த சந்திப்பான ஆத்துபாலத்தில் சூலூர்,சிங்கநல்லூர் தொகுதி உறவுகள் கலந்துகொள்கிறார்கள்.

அடுத்த சந்திப்பான சுந்தராபுரத்தில் தொண்டாமுத்தூர் தொகுதி உறவுகள் கலந்துகொள்கிறார்கள்.

அடுத்த சந்திப்பான மலுமிச்சம்பட்டியில் கிணத்துக்கடவு தொகுதி உறவுகள் கலந்து கொள்கிறார்கள்.

பிப்ரவரி 7ம்நாளில் பொள்ளாச்சியில் பொள்ளாச்சி,வால்பாறை தொகுதி உறவுகள் கலந்துகொள்கிறார்கள்.

பிப்ரவரி 8ம்நாள் தைப்பூசத்திருநாளில் வயலூர்,சண்மூகா நதி வழியாக பழனியில் முப்பாட்டன் முருகனை வழிபாடு செய்த உடன்
நடைப்பயணம் முடிக்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி மற்றும் நமது தோழமை அமைப்புகள் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் தஞ்சை பெரிய கோவிலில் தமிழிலும் குடமுழக்கு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வந்ததையொட்டி, தமிழகம் எங்கும் பொது மக்களிடம் எழுந்துள்ள தமிழ் எழுச்சிவிசையை நமது வசமாக்கும் பொருட்டு, வீரத்தமிழர் முன்னணி பாசறையின் பொறுப்பாளர்கள், அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் இவ்வருட தைப்பூச நிகழ்ச்சிகளை மிக வீரியமாக முன்னெடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு:-
திரு.அப்துல் வகாப் (எ) தமிழ்ச்செல்வன்:- 9952600000
திரு.சக்திவேல்:- 9943980916
திரு.சசிக்குமார்:- 9940946125

வெற்றிவேல் வீரவேல்