அறிவிப்பு: வணிகர் பாசறை கலந்தாய்வு – தலைமையகம்

599

அறிவிப்பு: வணிகர் பாசறை கலந்தாய்வு – தலைமையகம்

நாம் தமிழர் வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அ.செந்தமிழ் சரவணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் வருகின்ற 10-01-2020 வெள்ளிக்கிழமை மாலை 06 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில், வணிகர் பாசறை கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

நாம் தமிழர் வணிகர் பாசறைக் கட்டமைப்பை வலுபடுத்தவிருப்பதால் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டம்/தொகுதி வணிகர் பாசறைப் பொறுப்புகளுக்குப் பரிந்துரைக்கப்படும் உறவுகளைத் தங்களுடன் கலந்தாய்விற்கு அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கை
அடுத்த செய்திசுற்றறிக்கை: கொளத்தூர், திரு.வி.க.நகர் மற்றும் அம்பத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு