அறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு

141

அறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி | தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழு

தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் மட்டுமே நடத்தக்கோரி தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழு சார்பாக, எதிர்வரும் 01.02.2020 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்கவிருக்கிறார். எனவே நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் வீரத்தமிழர் முன்னணியின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

#தமிழ்க்குடமுழுக்குவேண்டும்
#PerformThamizhKudamuzhukku


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி