க.எண்: 2019120347
நாள்: 12.12.2019
சுற்றறிக்கை: உள்ளாட்சித் தேர்தல் – 2019 | வேட்புமனு தாக்கல் தொடர்பாக
தமிழகத்தில் வருகின்ற 27-12-2019 மற்றும் 30-12-2019 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “கரும்பு விவசாயி” சின்னத்தில் போட்டியிடுவதற்காக மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பணிக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளுக்கு 16-12-2019 (திங்கட்கிழமை) முன்னதாக சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு விடுமுறை நாட்கள் வருவதால் நாளை 13-12-2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள்ளாக, முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யுமாறும், ஏதேனும் திருத்தங்கள், மாற்றங்கள் இருப்பின் இறுதி நாளான 16-12-2019 (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள்ளாக கூடுதல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாவட்டவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் பட்டியலை, தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்திற்கு விரைவு-அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்குமாறு வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பணிக்குழுவினர் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு வழங்கப்படும் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை உறுதி செய்வதற்காக, கட்சி தலைமை மற்றும் மாவட்டப் பொறுப்பாளர் மூலமாக வழங்கப்படும் A மற்றும் B படிவங்களை வேட்புமனு திரும்ப பெறுவதற்குரிய கடைசி நாளான 19-12-2019 (வியாழக்கிழமை) மாலை 03 மணிக்குள்ளாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் நமது கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழுவினருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கி, உள்ளாட்சித் தேர்தல் களப்பணிகளில் ஒருங்கிணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நமது சின்னம் “விவசாயி”
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
இரா.இராவணன்
தேர்தல் செயலாளர்