க.எண்: 2019120340
நாள்: 03.12.2019
முக்கிய அறிவிப்பு: உள்ளாட்சித் தேர்தலையொட்டி பொதுக்குழுக் கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது
வருகின்ற 14-12-2019 சனிக்கிழமை, காலை 10 மணியளவில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பி.எல்.பி பேலஸ் (PLP Palace Wedding Hall) திருமண மண்டபத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருந்த பொதுக்குழுக் கூட்டம், உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதையொட்டி தள்ளிவைக்கப்படுகிறது. மேலும், பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்டும்.
எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் உள்ளாட்சித் தேர்தல் களப்பணிகளில் முழுமையான அர்ப்பணிப்புடன் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்