சுற்றறிக்கை: பொதுக்குழுக் கூட்ட அழைப்பு தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

412

 

க.எண்: 2019120395

நாள்: 31.12.2019

சுற்றறிக்கை: பொதுக்குழுக் கூட்ட அழைப்பு தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 04-01-2020 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை, வேலப்பன் சாவடி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கே.வி.என் திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. மாநில கட்டமைப்புக் குழுவினரால் கட்டமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட தொகுதித் தலைவர்கள் மற்றும் தொகுதிச் செயலாளர்களுக்கும், மாவட்டப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கும் மற்றும் அனைத்து பாசறைகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மட்டுமே பொதுக்குழுக் கூட்ட அழைப்பு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.

அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெற்ற பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மட்டுமே அரங்கினுள் அனுமதிக்கப்படுவார்கள். எனவே கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து கொண்டு, அதன் விவரத்தை மின்னஞ்சல்/பகிரியில் பெற்று, பொதுக்குழு கூட்டம் நடைபெறுமன்று காலை 8:30 மணிக்குள்ளாக உறுப்பினர் அட்டையுடன் நேரில் வந்தால் அழைப்பு நகல் வழங்கப்பட்டு அரங்கத்தினுள் அனுமதிக்கப்படுவார்கள்.

 

கு.செந்தில்குமார்

தலைமை நிலையச் செயலாளர்
ksenthil@naamtamilar.org