தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் கட்சி பொதுக்குழுக் கூட்டம்-2019 சென்னையில் கூடுகிறது

274

க.எண்: 2019120350

நாள்: 19.12.2019

அறிவிப்பு: பொதுக்குழுக் கூட்டம்-2019

கடந்த 14-12-2019 சனிக்கிழமை, காலை 10 மணியளவில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், நடைபெறவிருந்த பொதுக்குழுக் கூட்டம்-2019, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி தள்ளிவைக்கப்பட்டது. தற்போது தள்ளிவைக்கப்பட்டிருந்த பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 04-01-2020 சனிக்கிழமை, காலை 10 மணியளவில் சென்னையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற விருக்கிறது.

எனவே கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

 

 

முந்தைய செய்திஅறிவிப்பு: டிச.18, குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெறக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்