செய்திக்குறிப்பு: அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை (அடையாறு) | நாம் தமிழர் கட்சி
இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குறியீடு! இழந்துவிட்ட உரிமைகளைப் பிச்சைக்கேட்டுப் பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும். கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 06-12-2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை, அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார். .அதனைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.
[WRGF id=89001]
காணொளி:
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, விருகை இராஜேந்திரன், குருதிக்கொடை பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அரிமா நாதன் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084