மறைந்த திருவையாறு வழக்கறிஞர் சண்முகம் அவர்களின் குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல்

78

அண்மையில் மறைந்த திருவையாறு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டவரும், திருவையாறு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளராக சிறப்பாக செயல்பட்டவருமான மறைந்த வழக்கறிஞர் சண்முகம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தஞ்சை மாவட்டம் கல்லணையில் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மறைந்த சண்முகத்தின் பெற்றோருக்கும் மற்றும் துணைவியாருக்கும் ஆறுதல் கூறி அன்னாரது திருவுருவப் படத்தை திறந்து வைத்து புகழ் வணக்கம் செலுத்தி நினைவேந்தல் உரையாற்றினார்.