சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டக் கலந்தாய்வு

53

க.எண்: 2019110175
நாள்: 09.11.2019

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு
(நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள்)

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டுவருகின்றனர். நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கான கலந்தாய்வு வருகின்ற 11-11-2019 திங்கட்கிழமை அன்று நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வுக்கான மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் இடம்
11-11-2019
திங்கள்
காலை 09 மணியளவில் நாமக்கல் மாவட்டம் வி.வி.மகால் ( V.V.Mahal)

எஸ்.என்.டி. சாலை (S.N.D.Road)

திருச்செங்கோடு

பிற்பகல் 03 மணியளவில் சேலம் மாவட்டம் இராசா அம்மையப்பன் இல்லம்,

சேலம்-ஓமலூர் நெடுஞ்சாலை,
கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி முதல் வாயில் எதிரில், அசோக் லைலேண்ட் (Ashok Leyland) அருகில்

மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திஇராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியிருப்பது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல! – சீமான் கருத்து
அடுத்த செய்திசீமான் உயர்தர நிழற்படத் தொகுப்பு – 2019 [தரவிறக்கம்] | Download Seeman Latest HD Photos – 2019