விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் காமராஜர் நகர் (புதுச்சேரி) இடைத்தேர்தல் வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு

340

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் காமராஜர் நகர் (புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்கள் – சீமான் அறிவிப்பு  | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் 21-10-2019 அன்று நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி – காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான  இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (25-09-2019) அறிவித்துள்ளார் .

வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு;

 

  1. விக்கிரவாண்டி
கு.கந்தசாமி,
விவசாயி, தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர், சமூகச் செயற்பாட்டாளர், சிகரம் நற்பணி மன்றம்.2018 ஜனவரி மாதம் NEWS18 “இப்படிக்கு இவர்கள்”,  2019 ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் “நம்ம ஊரு ஹீரோ” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பொதுவெளியில் நன்றாக அறிமுகம் ஆனவர்.இவரது சமூகச் செயற்பாடுகளைப் பாராட்டி ஆனந்த விகடன், தினமலர், மண்வாசம் போன்ற இதழ்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
  1. நாங்குநேரி
சா.ராஜநாராயணன்,
இளங்கலை வரலாறு பட்டப்படிப்பு, வணிகர், தீவிர கட்சி களப்பணியாளர், பல்வேறு போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் கட்சி சார்பாக முன்னெடுத்துள்ளார்.
  1. காமராஜர் நகர்
    (புதுச்சேரி)
பிரவினா மதியழகன்,
குத்தூசி மருத்துவப் பட்டயப்படிப்பு முடித்துள்ளார். 10 வருடங்களுக்கு மேலாக மகளிர் சுய உதவிக் குழு ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டுவருகிறார். பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கி வருகிறார்.