சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு

27

க.எண்: 2019090148

நாள்: 11.09.2019

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி

நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளவிருக்கின்றனர்.

அதனையொட்டி வருகின்ற 14-09-2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில் *தலைமை அலுவலகத்தில்*, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட *இராதாகிருஷ்ணன் நகர், இராயபுரம்,* *பெரம்பூர், வில்லிவாக்கம்*
ஆகிய தொகுதிகளுக்கும்; அதனைத்தொடர்ந்து *பிற்பகல் 02* மணியளவில் *கொளத்தூர், திரு.வி.க நகர்,*
*எழும்பூர், துறைமுகம்* ஆகிய தொகுதிகளுக்கும் தனித்தனியாக கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

மறுநாள் *15-09-2019* ஞாயிற்றுக்கிழமை காலை *10* மணியளவில் தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட *அண்ணா நகர், விருகம்பாக்கம்,*
*தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கும்; அதனைத்தொடர்ந்து பிற்பகல் 02 மணியளவில் *மயிலாப்பூர்,வேளச்சேரி,* *திருவல்லிக்கேணி-சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு* ஆகிய தொகுதிகளுக்கும் தனித்தனியாக கலந்தாய்வு நடைபெறவிருக்கிறது.

கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திஅனிதா நினைவு தினம்-அரசு பள்ளியில் மரம் நாடும் விழா-குடந்தை
அடுத்த செய்திவிதிகளை மீறி சாலையின் நடுவே பதாகை வைத்து தங்கை சுபஸ்ரீயின் உயிரைப் பறித்தவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்