‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு

7

செய்திக்குறிப்பு: ‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி

‘காவிரிச்செல்வன்’ தம்பி பா.விக்னேசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று 16.09.2019 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பா.விக்னேசு திருவுருவப்படத்திற்கு முன்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் கூடி ஈகைச்சுடரேற்றி மலர் தூவி மலர்வணக்கம் செலுத்தினர்.

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் அவர்கள் கூறுகையில்,

நாடு சந்தித்திருக்கும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை மறைப்பதற்காகவே அமித் ஷா ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்று பேசி மக்களை திசை திருப்புகிறார் என்றும் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழக அரசு தனது நிலைபாட்டை வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில் அதில் உள்ள ஒரு கூறான ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருப்பது பிஞ்சு மாணவர்களின் உளவியல் மீதான வன்முறை. பத்தாவது மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுறும் பதின்மப் பருவ மாணவர்களே தற்கொலையைத் தீர்வாக நாடும் போக்கை மாற்ற பெற்றோர்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இளவயது மாணவர்கள் மீது திணிக்கப்படும் பொதுத்தேர்வில் ஏற்படும் தோல்வி படிப்பைப் பாதியிலேயே கைவிடும் சூழ்நிலைக்கும் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்கும் தள்ளிவிடும். எனவே தமிழக அரசு இம்முடிவை திரும்பப்பெற வேண்டும் என்றும் கூறினார்.