சுற்றறிக்கை: வீரத்தமிழர் முன்னணி மாநிலக் கலந்தாய்வு – இராவணன் குடில்

527

க.எண்: 2019070127

நாள்: 19.07.2019

சுற்றறிக்கை: வீரத்தமிழர் முன்னணி மாநிலக் கலந்தாய்வு – இராவணன் குடில் | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தமிழர் பண்பாட்டு மீட்பு அமைப்பான வீரத்தமிழர் முன்னணியின் அனைத்துநிலைப்  பொறுப்பாளர்களுக்கான மாநிலக் கலந்தாய்வு வருகின்ற 21-07-2019 ஞாயிற்றுகிழமை காலை 11 மணியளவில் நமது கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

இந்த கலந்தாய்வில் வீரத்தமிழர் முன்னணியின் அடுத்தடுத்த செயற்பாடுகள், முன்னெடுக்க வேண்டிய நிகழ்வுகள் குறித்தும் தஞ்சை மாநகரில் நடைபெறவிருக்கும் இராசராசசோழன் பெருவிழா குறித்தும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கலந்துரையாட இருக்கிறார்.

அவ்வயம் வீரத்தமிழர் முன்னணியைச் சேர்ந்த மாநில, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், வீரத்தமிழர் முன்னணியில் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பும் புதிய உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்:

முனைவர் செந்தில்நாதன் +91-9442248351
மாநில ஒருங்கிணைப்பாளர்
வீரத்தமிழர் முன்னணி

 

முந்தைய செய்திபெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்- பள்ளிகளுக்கு உதவி
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு-இராதாபுரம்