அறிவிப்பு: வீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் 262ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு

768

அறிவிப்பு: வீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் 262ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி

தன் தாய் நிலத்தை அடிமைப்படுத்தி ஆளத்துடித்த அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திர முழக்கமிட்ட பெருந்தகை! உன்னைப் பணிந்து பெறும் பதவியை விட, மரணமே எனக்குச் சம்மதம் என்று முழக்கமிட்டு 247 வீரர்களோடு மரணத்தின் வாசலை மானத்தோடும் வீரத்தோடும் சந்தித்த வீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 262ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 11-07-2019 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை எழும்பூர், காந்தி – இர்வின் சாலையில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.

அவ்வயம் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகக் கூடி பெருமிதத்தோடும் திமிரோடும் நமது வீரமிகு பாட்டனாருக்கு நம் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபனை விதை சேகரிப்பு-சூலூர் தொகுதி
அடுத்த செய்திசுற்றறிக்கை: பனை திருவிழா – 2019 | ஒரே நாளில் பத்து இலட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு