சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு – கலந்தாய்வுக் கூட்டம்

47

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு – கலந்தாய்வுக் கூட்டம்

எதிர்வரும் 22-06-2019 சனிக்கிழமை, காலை 11 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாநிலக் கட்டமைப்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் உட்கட்சிக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும், எதிர்வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைத் திறம்பட எதிர்கொள்ளும் பொருட்டு முன்னதாக  மேற்கொள்ளவேண்டிய களப்பணிகள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்படவிருக்கிறது.

அவ்வயம் மாநிலக் கட்டமைப்புக் குழுப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019060092