சூலூர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – எட்டாம் நாள் (11-05-2019 )

112

செய்திக்குறிப்பு: சூலூர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – எட்டாம் நாள் (11-05-2019 ) | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார்.

ஏழாம் நாளான நேற்று 10-05-2019 வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வழக்கறிஞர் மொ.வெ.விஜயராகவன் அவர்களை ஆதரித்து கண்ணம்பாளையம் தியாகிகள் நினைவரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் இருகூர் சுங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பரப்புரை .மேற்கொண்டார்

கண்ணம்பாளையம் : https://www.youtube.com/watch?v=h7OqosoOHlA

இருகூர் சுங்கம்: https://www.youtube.com/watch?v=lXXFpCAvBNo

எட்டாம் நாளான இன்று 11-05-2019 சனிக்கிழமை மாலை 04 மணியளவில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் ப.கா.செல்வம் அவர்களை ஆதரித்து சின்னதாராபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 07 மணியளவில் பள்ளப்பட்டி ஷா நகர் கார்னரில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு: https://www.youtube.com/c/NaamThamizharKatchi/live

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்: http://www.naamtamilar.org/


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – எட்டாம் நாள் (11-05-2019 அரவக்குறிச்சி)
அடுத்த செய்திபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை